தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இராணுவம் நிலை கொண்டிருந்த பகுதி எல்லாம் மனிதப் புதைகுழிகள்- அனந்தி சசிதரன்…

மண்டைதீவு உட்பட வடபகுதியில்  இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் மனித புதைகுழிகள் உள்ளதாக அனந்தி சசிதரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இராணுவம் நிலை கொண்டிருந்த அனைத்து இடங்களிலும் சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்  கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் மிக நீண்ட வரலாறு இந்த மண்ணிற்கு உண்டு என்றும், மன்னார் புதைகுழி என்பது மனித குலத்திற்கு ஏதிரான மனங்களை உலுக்குகின்ற சம்பவமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் அரசில்  தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச கண்காணிப்புடன் மனித புதை குழி தொடர்பான ஆய்வுகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கவேண்டும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் ஏராளமான மக்கள் காணாமல் போயுள்ளதாகவும் , அவர்கள் தொடர்பில்  சரியான புள்ளிவிபரங்கள் இல்லை என்றும் , இவ்வாறான  நிலையில் சர்வதேச நாடுகளின் உதவிகளை நாட வேண்டிய நிலையில் தமிழர்கள் உள்ளதாகவும் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.,

மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மண்டைதீவு உட்பட மேலும் பல தீவுகளில் மனித புதை குழி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் அனைத்து அரசியல் தலைவர்களும், பொது அமைப்புக்களும் சர்வதேச உதவியினை நாடவேண்டும் அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தினேசன் சிறிதரன் )
Thinesan Sritharan

Comments
Loading...