தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

குறித்த  சட்ட ஏற்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான் நாட்டவர்கள் 15 பேர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், 3 இலங்கையர்கள் ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உடன்படிக்கை அமுலாக்கப்படுவதன் ஊடாக, குறித்த குற்றவாளிகளை தங்கள், தங்கள் நாடுகளில் தடுத்து வைப்பதற்கான வழி ஏற்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...