தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது- ஐ.நா பொதுச்செயலர்

இலங்கையின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளதாக கூறியுள்ளார்.

நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர்  இதனை தெரிவித்துள்ளார்,

அதோடு  ஜனநாயக அமைப்புகளின் ஆற்றலையும் பாராட்டியுள்ளார்.

மேலும் ஜனநாயகத்தை மதிப்பது மற்றும் மக்களின் நலன்களுக்காக, நாட்டில் உள்ள அனைத்து தரப்புகளும், அரசியல் வேறுபாடுகளை தீர்ப்பதற்கு புதிய அமைச்சரவை நியமனத்தின் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்றும் அவர்   கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...