தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை….

இலங்கையின் சில பகுதிகளுக்கு அடுத்துவரும் சில மணித்தியாலங்கள்வரை பாரிய மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த  அறிவிப்பை  இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.

மத்திய மாகாணம், ஊவா மாகாணம், கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் மற்றும் வட மத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டம் ஆகியனவற்றுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதேசங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு  கிழக்கின் கடற்பிராந்தியத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மழை பெய்யும்  நேரத்தில் கடுமையான இடி மின்னல் தோன்றக்கூடும் என்பதனால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments
Loading...