தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான நிலையம் திருகோணமலையில்..

இலங்கையின் மூன்றாவது பன்னாடடு விமான  நிலையம் திருகோணமலையில் அமைக்கப்பட உள்ளது

நேற்றைய தினம்   அலரி மாளிகையில் இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போதே குறித்த  தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

2050ஆம் ஆண்டளவில் இலங்கையின் கிழக்கு ஜன்னலாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யவும் இதன்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொழும்பு பண்டாரநாயக்க பன்னாட்டு விமான   நிலையம் மற்றும் மத்தள பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்ததாக திருகோணமலையில் புதிய விமான நிலையம் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...