தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் அறிமுகமாகும் விமான அம்புலன்ஸ் சேவை!

இலங்கையில் விமான அம்புலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

திடீர் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் உயிர் ஆபத்துக்களை குறைத்து கொள்ளும் நோக்கில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இலங்கையில் உரிய பாதுகாப்பு முறை ஒன்று இல்லாமையினால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான நோயாளர்கள் முச்சக்கர வண்டியிலேயே அழைத்து செல்லப்படுகின்றனர்.

இதன் காரணமாகவே அம்புலன்ஸ் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. தற்போது கொழும்பு மற்றும் தென் பகுதியில் 88 சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்டங்களுக்கும் அவசர விபத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நல்ல முறையில் இந்த நடவடிக்கை முன்னெடுத்து செல்லப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...