தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் தமிழர்கள் மீது தொடரும் சித்திரைவதைகள்! புதிய ஆதாரத்தை வெளியிட்ட அல் ஜெசீரா

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னமும் அங்கு தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்வதாக அல்- ஜெசீரா தொலைக்காட்சி புதிய ஆதாரங்களை முன்வைத்துள்ளது.
தற்போதைய ஆட்சிக்காலத்தில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழர்களின் புதிய காணொலி சாட்சியங்களுடன் அல்- ஜெசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரும் தமிழர்கள் சித்திரவதைகளை எதிர்கொள்வதாக இந்த காணொலிப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...