தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகி விட்ட  நிலையில்,  இதுவரை எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை

இலங்கையில் போர் முடிவடைந்து 10 வருடங்களாகி விட்ட  நிலையில்,  போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் இதுவரை எவரும் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைளை பற்றி செய்திகள் வெளியிடும் யூஎன் டிஸ்பெச் என்ற இணையம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமின்மை  காரணமாக இந்த குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் மறைக்கப்பட்டுள்ளதாக அந்த இணையம் குறிப்பிட்டுள்ளது.

லண்டன், யுனிவெசிட்டி கொலேஜின் அரசியல் விஞ்ஞான திணைக்கள உதவி போராசியர் கேட் க்ரோனின் – பார்மன், இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக  அந்த இணையம் தெரிவித்துள்ளது.

யுத்தத்தின்போது மனிதாபிமானத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள் இன்று அரசியல் ஸ்திரமின்மை என்ற விடயத்தினால் மறைப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  இலங்கையின் இன்றைய அரசியல் நிலை, போர்க்குற்றங்கள் தொடர்பிலான பொறுப்பு கூறலை வெளி கொண்டு வருவதில் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக  யூஎன் டிஸ்பெச்  இணையம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Comments
Loading...