தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையில் வெளிநாட்டு பெண்கள் 28 பேருக்கு 6 மாத சிறை..

இலங்கையில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வெளிநாட்டு பெண்கள் 28 பேருக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு சென்ற  தாய்லாந்து நாட்டை சேர்ந்த  குறித்த பெண்கள்  விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சும்மத்தப்பட்டுள்ளது.

அவர்களிற்கு  கொழும்பு கோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி லங்கா ஜயரத்ன இந்த சிறைதண்டனையினை விதித்து உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

குறித்த  28 பேரில் 16 பேர் இலங்கையின் விசா விதிமுறையை மீறி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்துள்ளனர்.

சட்டவிரோதமாக தங்கியிருந்த குறித்த 16 பேருக்கும்  150,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்களிற்கு எதிராக இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு சட்டத்தை மீறியமை தொடர்பிலும்  பொலிஸார்  அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை குறித்த பெண்கள் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட விடுதியின் முகாமையாளரான இரு இலங்கை பெண்களுக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் 10 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...