தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை செல்லும் கனடா பிரஜைகளுக்கு எச்சரிக்கை…

இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு கனேடிய அரசாங்கம்  எச்சரிகை விடுத்துள்ளது.

இலங்கைக்கு செல்லும் தமிழ் கனேடியர்கள் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கக்கூடிய ஆபத்து உள்ள தாகவும் , இதனால்  எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் எனவும் கனடிய பிரஜைகளிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வடக்குகிழக்கில் தொடர்ந்தும் படையினரின் பிரசன்னம் உள்ளதாகவும்,  அங்கு  நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி அங்கு செல்லும் தமிழ் வம்சாவளியினர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்படலாம் எனவும் கனேடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது..

அத்துடன் அங்கு  மதங்களுக்கு இடையிலான பிரச்சினைகள் இனங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்தலாம் எனவும் கனேடிய அரசாங்கம்   தெரிவித்துள்ளது..

இதேவேளை   மேற்கத்தைய சுற்றுலாப்பயணிகளை தொந்தரவுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள் அங்கு அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும் கனேடிய அரசாங்கம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...