தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை தொடர்பில் இன்று ஜெனீவாவில் விவாதம்…

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இன்று ,மனித உரிமைகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை பாதுகாப்பதில்இலங்கை  நாடாளுமன்ற வகிபாகம் எனும் தலைப்பில்  விவாதம் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது இலங்கையில்  அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது.

நாட்டில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் மற்றும் ஸ்திரமின்மையும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட  மோதல்களும் உலகளவில் இலங்கை மீது அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.

அதோடு கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை நாடாளுமன்றில்   ஜனநாயகம் மற்றும் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்நிலையில் இன்று  மற்றும் நாளை   இடம்பெறும்விவாதம் காரணமாக இலங்கைக்கு  பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த  விவாதத்தில் சிவில் சமூகத்தை சேந்தவர்களான நல்லிணக்க பொறிமுறைக்கான கலந்தாலோசணைச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து, அசங்க வெலிகல, மனித உரிமை செயற்பாட்டாளரான ஷிரீன் சரூர், அலன் கீனாம் ஆகியோரும்  கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...