தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கை தொடர்பில் புதிய பொறிமுறையை வலியுறுத்தவுள்ள ஹூசேன்!

ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இம்­முறை இலங்கை நிலைமை பாரிய சூடு­பி­டிக்கும் நிலையில்காணப்­ப­டு­கின்ற சூழலில் பல்­வேறு தரப்­பி­னரும் இலங்கை விவ­காரம் குறித்து அவ­தானம் செலுத்த ஆரம்­பித்­துள்­ளனர். இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள பர­ப­ரப்­பான அர­சியல் சூழலில் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடர் நடை­பெ­ற­வுள்­ளமை விசேட அம்­ச­மாகும்.
இம்­முறை ஜெனிவாக் கூட்டத் தொடரில் இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்­ளன. முதல் கட்­ட­மாக மார்ச் மாதம் 15ஆம் திகதி இலங்கை தொடர்­பான பூகோள காலக்­கி­ரம மீளாய்வு விவாதம் ஜெனி­வா கூட்டத் தொடரில் நடை­பெ­ற­வுள்­ளது.
இதே­போன்று மார்ச் 21ஆம் திகதி ஜெனிவாப் பிரே­ர­ணையை இலங்கை எவ்­வாறு அமுல்­ப­டுத்­தி­யது என்­பது குறித்து ஆராயும் விவா­தமும் நடை­பெ­ற­வுள்­ளது. மேலும் 14 க்கும் மேற்­பட்ட உப­கு­ழுக்­கூட்­டங்­களும் ஜெனிவா வளா­கத்தில் இம்­முறை கூட்டத் தொடரில் நடை­பெ­ற­வுள்­ளன.
இதே­வேளை இம்­முறை இலங்கை விவ­காரம் தொடர்பில் பல்­முனை பிர­சா­ரங்கள் ஜெனி­வாவில் இடம்­பெ­ற­வுள்­ளன. இலங்கை விவ­காரம் தொடர்பில் பாதிக்­கப்­பட்ட மக்கள், தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் மற்றும் தென்­னி­லங்கை பொது அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள், சர்­வ­தேச அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ள­துடன் ஜெனிவா வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்ள உப நிகழ்­வு­களில் உரை­யாற்­ற­வுள்­ள­துடன் பல­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர்.
தமிழ் பேசும் மக்­க­ளைப்­பொ­றுத்­த­வ­ரையில் பாதிக்­கப்­பட்ட மக்கள், மக்கள் பிர­தி­திகள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் என பல்­வேறு தரப்­பினர் இம்­முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­டாமை தொடர்பில் வலி­யு­றுத்­து­வ­தற்கு தயா­ரா­கி ­வ­ரு­கின்­றனர்.
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பும் பிர­தி­நி­தி­களை ஜெனி­வா­வுக்கு அனுப்பி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­ வேண்டும் என்­ப­தனை வலி­யு­றுத்­த­வுள்­ளது. குறிப்­பாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண ­சபை உறுப்­பி­னர்­களைக் கொண்ட ஐந்­து­பேரைக் கொண்ட குழு கூட்­ட­மைப்பின் சார்பில் ஜெனிவா நோக்கி செல்­ல­வுள்­ளது.
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­த­ரனும் இம்­முறை ஜெனிவா கூட்டத்தொடரில் பங்­கேற்­க­வுள்ளார். இது தொடர்பில் கருத்து வெ ளியிட்­டுள்ள சிறி­தரன் எம்.பி. இலங்கை அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை என்றும் எனவே இம்­முறை ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை தொடர்­பாக எடுத்­து­ரைப்­பதாகவும் கூறி­யுள்ளார். அத்­துடன் ஜெனிவா வளா­கத்தில் சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­களை சந்­தித்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்­த­வுள்­ள­தா­கவும் அவர் கூறி­யி­ருக்­கின்றார்.
இது இவ்­வாறிருக்க வழ­மை­போன்று இம்­மு­றையும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­தி­களும் ஜெனிவா நோக்கி பய­ணிக்­க­வுள்­ளனர். குறிப்­பாக அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் ஏற்­பாட்டின் அடிப்­ப­டையில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் ஒவ்­வொரு மாவட்­டத்திலி­ருந்தும் தெரிவு செய்­யப்­பட்ட பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நி­திகள் ஜெனிவா கூட்டத்தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வரை ஜெனிவா வளா­கத்தில் நடை­பெறும் உப­குழுக்கூட்­டங்­களில் கலந்­து­கொண்டு தமக்­கான நீதி தொடர்பில் வலி­யு­றுத்­த­வுள்­ளனர்.
அத்­துடன் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் செல்­வ­ராஜா கஜேந்­திரன் உள்­ளிட்ட பல்­வேறு உறுப்­பி­னர்­களைக் கொண்ட குழுவும் ஜெனி­வாவில் முகா­மிட்டு பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிரச்­சினை தொடர்பில் எடுத்­துக்­கூ­ற­வுள்­ளனர்.
இதே­வேளை வட­மா­காண சபை அமைச்சர் அனந்தி சசி­த­ரனும் வழ­மை­போன்று இம்­மு­றையும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டு காணாமல் போன மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்பில் சர்­வ­தேச சமூ­கத்தை தெளி­வு­ப­டுத்த இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
இதே­வேளை பாதிக்­கப்­பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிர­தி­நி­திகள், அரச சார்­பற்ற மக்கள் பிர­தி­நி­திகள் ஜெனிவா வளா­கத்தில் நடை­பெறும் உப­கு­ழுக்­கூட்­டங்­களில் கலந்துகொண்டு உரை­யாற்­ற­வுள்­ள­துடன் சர்­வ­தேச ராஜ­தந்­தி­ரி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளனர்.
இது இவ்­வா­றி­ருக்க தென்­னி­லங்­கையின் எலிய அமைப்பின் பிர­தி­நி­தி­யான முன்னாள் பிரதி அமைச்சர் சரத் வீர­சே­க­ரவும் ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொண்டு பிர­சாரம் செய்­ய­வி­ருக்­கிறார். அதா­வது இலங்கை அரசாங்கம் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் செயிட் அல் ஹுசைன் கூறு­கின்ற அனைத்­தையும் அர­சாங்கம் கேட்­ப­தா­கவும் அவர் ஜெனி­வாவில் எடுத்­துக்­கூ­ற­வுள்­ள­தா­கவும் அறி­வித்­துள்ளார்.
அதா­வது போர்க்­குற்­றங்­களை நிரா­க­ரிக்கும் எமது நிலைப்­பாட்டை இம்­மு­றையும் ஜெனி­வாவில் தெரி­விப்போம் என்று சரத் வீர­சே­கர குறிப்­பிட்­டுள்ளார்.
அத்­துடன் அர­சாங்கத் தரப்பு தாம் எவ்­வாறு நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம் என்­பது குறித்து ஜெனி­வாவில் விளக்­க­ம­ளிக்­க­வுள்­ள­துடன் ஜெனிவா வளா­கத்தில் நடை­பெறும் உப­கு­ழுக்­கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு தமது பக்க நியா­யங்­களை வெளிப்­ப­டுத்­த­வுள்­ளது.
இதற்­காக வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரிகள் குழு ஜெனிவா செல்­ல­வுள்­ளது. அதே­போன்று வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­க­ளுடன் ஜெனி­வா­வி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரி­களும் கூட்­டங்­களில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
இந்­நி­லையில் ஜெனிவா கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் இலங்கை குறித்த அறிக்­கையை வெளியிட்­டி­ருக்­கின்றார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை எவ்­வாறு அமுல்­ப­டுத்­து­கின்­றது என்­பது குறித்தே அறிக்­கையை வெளியிட்­டி­ருக்­கின்றார்.
அதில் இலங்கை மீது அதி­ருப்­தியை வெளியிட்­டுள்­ள­துடன் இலங்­கை­யா­னது பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்கும் செயற்­பாட்டில் சர்­வ­தேச நியா­யா­திக்­கத்தை பயன்­ப­டுத்­து­வது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடுகள் ஆரா­ய­வேண்­டு­மெ­னவும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
அத்­துடன் இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேரவை முன்­னெ­டுத்து வரு­கின்ற வகி­பாகம் மீண்டும் தொட­ர­வேண்டும். 2017 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்தும் செயற்­பாடு கடந்த ஒரு­ வ­ரு­ட­கா­ல­மாக தேங்­கிக்­கி­டக்­கின்­றது என்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.
பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டிய பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்­டுக்கு அர­சியல் ஒத்­து­ழைப்பு கிடைக்­காத நிலைமை இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்­குதல், காணி­களை விடு­வித்தல் மற்றும் நம்­பிக்­கையை கட்­டி­யெ­ழுப்­புதல் என்­பன முன்­னெ­டுக்­கப்­ப­டா­மையே காணப்­ப­டு­கின்­றன என்றும் செய்ட் அல் ஹுசைன் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.
அந்­த­வ­கையில் எச்­ச­ரிக்கை கலந்த அதி­ருப்­தியை மறை­மு­க­மாக செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்­துள்­ள­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அதா­வது நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு பத­விக்கு வந்­த­தி­லி­ருந்து பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் திருப்­தி­ய­டையும் வகை­யி­லான முன்­னேற்­றத்தைக் காட்­ட­வில்லை என்ற அதி­ருப்­தி­யையே செய்ட் அல் ஹுசேன் வெளியிட்­டி­ருக்­கின்றார்.
இலங்கை அர­சாங்­க­மா­னது நான்கு கார­ணி­களின் அடிப்­ப­டையில் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வைக்கு வாக்­கு­றுதி அளித்­தது. உண்­மையை கண்­ட­றிதல், நீதியை நிலை­நாட்­டுதல், நட்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் மீள்­நி­க­ழா­மையை உறு­திப்­ப­டுத்­துதல் போன்ற நான்கு கார­ணி­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­தது. ஆனால் இந்த நான்கு கார­ணி­களில் எந்த விட­ய­முமே இது­வரை முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.
தற்­போது உண்­மையை கண்­ட­றிதல் என்ற விட­யத்தின் கீழ் நிறு­வப்­பட்­டுள்ள காணாமல் போனோர் அலு­வ­ல­கத்­துக்கு ஜனா­தி­ப­தி­யினால் ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். தற்­போது ஜெனி­வா­வி­லி­ருந்து கடும் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்ற நிலை­யி­லேயே அர­சாங்கம் இந்த அலு­வ­ல­கத்­துக்­கான ஆணை­யா­ளர்­களை நிய­மித்­துள்­ளது.
ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் தலை­மையில் மேலும் ஆறு உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். ஜய­தீபா புண்ணி­ய­மூர்த்தி, மேஜர் ஜெனரல் (ஓய்­வு­பெற்ற) மொஹந்தி அண்­டொனட் பீரிஸ், கலா­நிதி நிமல்கா பெர்னாண்டோ, மிராக் ரஹிம், சோம­சி­ரிகே லிய­னகே, கண­பதிப் பிள்ளை வேந்தன் ஆகியோர் இவ்­வாறு ஆணை­யா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டனர்.
இவர்­களின் பத­விக்­காலம் மூன்று வரு­டங்­க­ளுக்கு வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ரு­டத்­திற்­கான வரவு செலவுத் திட்­டத்­தி­னூ­டாக இந்தக் காணாமல் போனோர் அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­காக 130 கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.
இலங்­கையில் காணா­மல்­போ­னோ­ருக்கு என்ன நடந்­தி­ருக்­கி­றது என்­பதை ஆராய்ந்து அவர்­களின் நிலை­மைகள் தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுக்கும் பொறுப்பு இந்த அலு­வ­ல­கத்­திற்கு வழங்­கப்­ப­டு­கி­றது.
அந்­த­வ­கையில் தற்­போது கடும் தாம­த­மா­னாலும் இதன்­மூலம் காணாமல் போன தமது உற­வு­க­ளுக்கு விடை கிடைக்கும் என்று பாதிக்­கப்­பட்ட மக்­கள் எதிர்­பார்க்­கின்­றனர். எனவே அர­சாங்கம் தொடர்ந்தும் தாம­திக்­காமல் இந்த அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.
பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் பாரிய விரக்­தி­யுடன் இருக்­கின்­றனர். நீதிக்­காக ஏங்­கிக்­கொண்­டி­ருக்கும் மக்­க­ளுக்கு இது­வரை விடிவு கிடைத்­த­தாக இல்லை. இந்­நி­லையில் ஒவ்­வொரு நான்கு மாதங்­க­ளுக்கும் ஒரு­முறை ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடர் நடைபெற்றுவருகின்றது. அதில் சர்வதேசமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குமாறு வலியுறுத்துகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தக் கூட்டத்தொடர்களில் பங்கேற்று தமக்கு நீதியை பெற்றுத்தருமாறு கோருகின்றனர். ஆனால் நிலைமை அவ்வாறே நீடிக்கின்றது.
எனவே இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுகின்றது. இலங்கை மனித உரிமை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் என்ன சொல்லப்போகின்றன? என்ற விடயமும் பேசுபொருளாகியுள்ளன. அதாவது இலங்கை விவகாரத்தில் ஏற்கனவே கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள செய்ட் அல் ஹுசேன் இம்முறை ஏதாவது புதிய பொறிமுறையை வலியுறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை விடயத்தில் மாற்று வழிகளை ஆராயுமாறு செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவை உறுப்பு நாடுகளிடம் கோரியுள்ளார். இதன் அர்த்தம் என்னவென்பதனை புரிந்துகொள்ள வேண்டும். அதாவது இம்முறை புதிய கோரிக்கை அல்லது புதிய மாற்று வழி போன்ற ஏதாவது அணுகு முறையை செய்ட் அல் ஹுசேன் முன்வைப்பாரா என்று பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 21 ஆம் திகதி செய்ட் அல் ஹுசேன் என்ன கூறப்போகின்றார் என்று பார்ப்போம்.

Comments
Loading...