தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலந்தை பழத்தின் நன்மைகள்

 

இலந்தைப்பழம் கிராமங்களில் சுவையானபழம் இது முள்மரத்தில் வளரக்கூடிய பழம். அதிகமாக காட்டுப்பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்.இந்தப்பழங்களில் அதிக மருத்துவ குணமுண்டு அதன் பயன்களை காண்போம்.

01) நாட்டு இலந்தைப்பழத்தில் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்திருக்கும். நல்ல சுவையாக இருக்கும்.

02) சுண்ணாம்புச் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.

03) கிடைக்கும் காலத்தில் அதிகமாக சாப்பிடுவதால் எலும்பு நன்றாக வளரும். பலம் பெறும்.

04)  பற்கள் நுனுங்கிக்கொண்டே சிலருக்கு இருக்கும் இது கால்சியம் குறைபாடால் தான் நடக்கும். அப்படிப்பட்டவர்கள் இலந்தைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் கால்சியம் சமன் ஆகும்.

05) பித்தத்தால் ஏற்படும் வாந்தி பேதி மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றிற்கு இலந்தை சாப்பிட்டால் பித்தம் குறையும்.

06) வயோதிகத்தால் ஏற்படும் உடல்வலி தீர இலந்தை சாப்பிட்டோமானால் உடனே இந்தபிரச்னை தீர்ந்துவிடும்

07) செரிமானப்பிரச்னையை இந்த இலந்தைபழம் சரிசெய்து விடும்.

08) பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ்க்கு பிறகு ஏற்படும் மூட்டு வலிக்கு இலந்தை மிகுந்த நிவாரணி.

 

Comments
Loading...