தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து விபத்து…

ஈரானில் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரான்  தலைநகர் டெஹ்ரானுக்கு மேற்கே உள்ள Fath விமான நிலையத்தில் இருந்து போயிங் 707 சரக்கு விமானமானது புறப்பட்டது.

குறித்த விமானம்  புறப்பட்ட சிறிது நேரத்தில் விழுந்து  தீப்பிடித்து எரிந்துள்ளது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம்   கட்டுப்பாட்டை இழந்து இந்த   விபத்து  ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை  குறித்த விமானத்தில் 10 பேர் வரை இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

எனினும் இந்த விபத்து தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...