தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈரான் நாடாளுமன்ற சாபாநாயகர் அலி லாரிஜனி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்

ஈரான் நாடாளுமன்ற சாபாநாயகர் அலி லாரிஜனி (Ali Larijani) இந்த வாரமளவில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வியட்நாமிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அவர் இலங்கைக்கு  செல்லவுள்ளதாகவும், அங்கு அவர்  பல உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின்போது , இரு தரப்பு உறவுகள் மற்றும் உலக அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாட  உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் குறிப்பாக சிரியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள்,மற்றும்  அதன் நிலைமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments
Loading...