தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத்தின் முதலாவது மொழியியல் ஆசான் பேராசிரியர் காலமாகியுள்ளார்.

உலக அளவில் மொழியியலாளர் மத்தியில் நன்கு அறியப்பட்ட அங்கீகாரம் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மொழியியல்துறையின் முன்னாள் தலைவரும்,

முதலாவது மொழியியல் பேராசிரியருமான சுவாமிநாதன் சுசீந்திரராஜா அவர்கள்  நேற்று முன் தினம் (11-01-2019 )  கொழும்பில் காலமாகியுள்ளார்.

யாழ் சுண்டுக்குழியைச் சேர்ந்த பேராசிரியர் சுசீந்திரராஜா அவர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இலங்கைத் தமிழ் பற்றி நவீன மொழியியல் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் தமிழியல் ஆய்வில் தனி முத்திரை பதித்த பெருமைக்குரியவர்.

தனது வாழ்வியலின் மூலம் எப்படி ஒரு ஆசான் இருக்கவேண்டும் என்பதை அவர்  வாழ்ந்துகாட்டியவர்.

எல்லோராலும் பயபக்தியுடன் மதிக்கப்பட்டு வந்த உயர்ந்த ஒரு மாமேதையை எம் தேசம் நேற்று இழந்துவிட்டது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Comments
Loading...