தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஈழத் தமிழர்கள் யாரையும் நாடுகடத்த வேண்டாம் என கோரிக்கை…

பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஈழத் தமிழர்கள் யாரையும் நாடுகடத்த வேண்டாம்என  கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.

பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று,இதுதொடர்பில்  பிரித்தானிய ராஜாங்க செயலாளர் சஜிட் ஜாவிட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு, அவர்களை நாடுகடத்துவதை நிறுத்துமாறு  கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கடிதத்தினை ஜோன் ரியான், சியோபாயின் மெக்டோனா, வெஸ் ஸ்டீரிங், ஸ்டெஃபன் திம்ஸ், மைக் கேப்ஸ், விரேந்திர ஷர்மா மற்றும் கரேத் தோமஸ் ஆகிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து  அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...