தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உங்களிற்கு தெரியுமா? கண்ணிவெடிகளை அகற்றுவதில் மனிதர்களை விட எலி வேகமாக செயல்படும்…


எலி :

கண்ணிவெடிகள் நிலத்தில் புதைத்து வைத்திருப்பதை கண்டறிய பல நாடுகளில் எலி தான் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் ஆப்பரிக்காவை சேர்ந்த எலி இனங்களிலேயே சற்று பெரிதாக இருக்கக்கூடிய எலிகளில் கூர்மையான பார்வை இருக்காது. ஆனால் அபரிதமான நுகர்வு சக்தி இருக்கும்.

ஆப்பரிக்காவைச் சுற்றியுள்ள அங்கோலா, டன்சானியா, மொசம்பிகியு, கம்போடியா ஆகிய இடங்களில் ஏராளமான கன்னிவெடிகளை கண்டறிந்திருந்து மக்களின் உயிரை காப்பாற்றியிருக்கிறது.

2000 அடி தூரத்தை மனிதர்கள் தேட வேண்டும் என்றால் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் ஆகும். ஆனால் அதே தூரத்தை எலிகள் 20 நிமிடங்களில் முடித்துவிடும்.

புதைக்கப்பட்டிருக்கும் கன்னிவெடிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அளவு எலிகள் எடையல்ல. அதற்குள்ளாக எலிகளின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலமாக அவை இருப்பதை உறுதி செய்த பின்னர் அதனை பாதுகாப்பாக அகற்றிவிடுகிறார்கள்.

தேனீ :

கன்னிவெடிகளை கண்டுபிடிக்க தேனீக்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்!. அந்தக் காலத்தில் வெடிப்பொருட்கள் தயாரிக்க சர்க்கரை போன்ற இனிப்பை பயன்படுத்துவார்கள்.

அதனால் தேனீயை பயன்படுத்தி அவை தேடிச் செல்லும் இடத்தை கண்டறிந்து கன்னிவெடிகளை அகற்றுவார்கள். நாய் மற்றும் எலி ஆகியவற்றை பயன்படுத்தி கன்னிவெடிகளை நீக்குவதை விட தேனீக்களை பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் மிக குறைவு.

பூனை :

பூனைகளிடம் இருக்கிற நுண்ணறிவை வைத்து நாம் உடல் நலமின்றி இருக்கிறோமா இல்லையா என்பதை அது எளிதாக கண்டுபிடித்துவிடுமாம். உடலில் ஏற்படுகிற கெமிக்கல் ரியாக்‌ஷன்கள் அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய நோய்த் தொற்றுகளை பூனைகள் உணர்ந்துவிடும். மனிதர்கள் மட்டுமின்றி பிற விலங்குகளிடத்தில் நோய் பாதிப்பு இருந்தாலும் பூனை கண்டுபிடித்துவிடும்.

யானை :

நிலத்தில் வாழும் விலங்கினங்களில் மிகப்பெரியது யானை. யானைக்கு கேட்கும் திறன் அதிகம். சென்று கொண்டிருக்கும் வழித்தடத்தை கச்சிதமாக நினைவில் வைத்திருக்கும். அதே போல மழை பெய்தால், சுமார்241 கிலோமீட்டருக்கு தொலைவில் இருக்கும் யானை உணர்ந்து கொள்ளும்.

டால்பின்கள் :

டால்பின்களின் தலைப்பகுதியில் இருக்கக்கூடிய ஓர் உறுப்பு தான் டால்பின்களின் ரேடாராக செயல்படுகிறது. ஒலியை எழுப்பி அவை எதிரொலிப்பதை வைத்தே தன் பாதையை வகுத்துக் கொள்கிறது. தன்னைச் சுற்றியிருக்கும் ஆபத்துக்களை உணரவும் தலை மேல் இருக்கும் உறுப்பு பயன்படுகிறது. ஏன் இந்த உறுப்பு தான் டால்பின் கருத்தரித்திருக்கிறது என்பதை கண்டறியவும் உதவுகிறதாம்!

 

 

 

Comments
Loading...