தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உடைந்த மரக்கிளையை ஏணியாகப் பயன்படுத்தி தப்பிச் சென்ற சிம்பன்ஸி..

வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்பெஸ்ட் விலங்கியல் பூங்காவிலிருந்து  உடைந்த மரக்கிளையை ஏணியாகப் பயன்படுத்தி சிம்பன்ஸி ஒன்று  தப்பிச் சென்றுள்ளது.

குறித்த பூங்காவில்  சிம்பன்ஸிகள் வசிக்கும் பகுதியில் இருந்த மரக்கிளை ஒன்று ஒடிந்து விழுந்துள்ளது.

அதனைக் கண்ட சில சிம்பன்ஸிகள் அதனை ஏணி போல பயன்படுத்தி தங்களின் இடத்தை விட்டு வெளியே வந்தன.

அதில் சில சிம்பன்ஸிக்கள் மீண்டும் தங்கள் கூண்டுக்குச் சென்று விட, ஒரேயொரு சிம்பன்ஸி மட்டும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இதையடுத்து மாயமான அந்த  சிம்பன்ஸியை பூங்கா நிர்வாகிகள் தேடி வருகின்றனர்.

Comments
Loading...