தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உத்தரபிரதேசத்தில் விமானப்படை விமானம் விழுந்து விபத்து

உத்தர பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டம், கோரக்பூரில் இந்திய விமானப்படை வீரர்கள் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில், கோரக்பூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ஜாகுவார் போர் விமானம், சிறிது நேரத்தில் ஹதேம்ர் பகுதியில் விபத்துக்குள்ளானது. தரையில் மோதியதும் விமானம் தீப்பிடித்தது.

ஆனால், விமானம் தரையில் விழுந்தவுடன், விமானி சாமர்த்தியமாக வெளியே குதித்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments
Loading...