தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உமேஷ் யாதவ் வரைந்துள்ள டாட்டூவை பார்த்து அசந்துபோன ஸ்டெயின்

உடல் முழுவதும் பச்சைக் குத்துவது தற்போது பேஷனாகவும், பொழுபோக்காகவும் மாறியுள்ளது. பாப் பாடகர்கள் தங்கள் உடல் முழுவதும் படங்களை டாட்டூவாக வரைவது பேஷனமாக வைத்திருந்தனர். தற்போது அது விளையாட்டுத்துறையிலும் பரவியுள்ளது. கால்பந்து வீரர்கள் அதிக அளவில் தங்களது உடலில் டாட்டூ வரைகின்றனர்.

டாட்டூ வரையும் இந்த கலாசாரம் கிரிக்கெட்டிலும் பரவியுள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிராண்டன் மெக்கல்லம் உடல் முழுவதும் டாட்டூ வரைந்திருப்பார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது கையில் படங்கள் வரைந்துள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது கையில் ஐந்து உருவங்களை டாட்டூவாக வரைந்துள்ளார். இதில் பெரும்பாலானவற்றை அவரே வரைந்துள்ளார்.

அதேபோல் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினும் தனது கையில் டாட்டூ வரைந்துள்ளார். உமேஷ் யாதவ் கையில் உள்ள படங்கள் ஸ்டெயினை வெகுவாக ஈர்த்துள்ளது. இதனால் உமேஷ் யாதவ் கைப்பிடித்து அதில் உள்ள படங்களை ஸ்டெயின் ரசித்துள்ளார்.

Comments
Loading...