தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது தாக்குதல் நடத்தப் போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது

ரஷ்யாவில் நடக்க உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது தாக்குதல் நடத்தப் போவதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில்  சுவரொட்டி ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

குறித்த சுவரொட்டியில்  சிரியாவில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த சுவரொட்டியில் உலகக்கோப்பை கால்பந்து மைதானத்தில் புதின் பேசிக் கொண்டிருப்பது போலவும், அவர் துப்பாக்கியால் குறி வைக்கப்பட்டிருப்பது போன்றும் படங்கள்  வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை  உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் வரும் ஜூன் 14ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை 11வரை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...