தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக செஸ் போட்டியில்,  மீண்டும் டிரா செய்தார் கார்ல்சென் .

நடப்பு சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே), பாபியானோ காருனா (அமெரிக்கா) இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் 12 சுற்று முடிவில் அதிக புள்ளிகள் எடுக்கும் வீரருக்கு மகுடம் கிட்டும்.

முதல் 2 சுற்றுகள் டிரா ஆன நிலையில் 3-வது சுற்று நேற்று முன்தினம் நடந்தது.

இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய கார்ல்சென் 49-வது நகர்த்தலில் ‘டிரா’ கண்டார். இந்த ஆட்டம் 4¼ மணி நேரம் நீடித்தது.

எனினும் இந்த முடிவு திருப்தி அளித்தாலும், தனது ஆட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டி உள்ளதாக  கார்ல்சென் கூறியுள்ளார்.

Comments
Loading...