Designed by Iniyas LTD
உள்ளுராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வு மார்ச் மாதம்!
உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 2ஆம் திகதி இடம்பெற உள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுடன் கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பெப்ரவரி 15ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் முதலாவது அமர்வை நடத்த எதிர்ப்பார்க்கப்பட்டிருந்தது.
எனினும், உறுப்பினர்களின் பெயர்பட்டியலை இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளின் காரணமாக முதலாவது அமர்வு மார்ச் மாதம் இரண்டாம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி கூறியதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.