தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்கட்சித்தலைவர் மற்றும் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிர்கட்சி  சமர்ப்பிக்கவுள்ளதாக  அந்த கட்சியின்  நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா  தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் கையொப்பத்துடனும் குறித்தநம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிளவுகள் சர்ச்சைகள் எழுந்துள்ளமையினால் விரைவில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...