தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எத்தகைய தடைகள் வந்தாலும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி – ஜனாதிபதி….

எத்தகைய தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதாகவும்,

மனித உரிமை என்ற போர்வையில் இலங்கைக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றதாகவும் அவர் இதன்போது கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமாக இருந்தால், சட்டங்களைக் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான ஆவணங்களை கடந்த ஒன்றரை வருடங்களாகத்கோரி வருகின்ற போதிலும்,

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் சரியான ஆவணங்கள் கடந்த ஜனவரி மாதத்திற்கானது மாத்திரமே கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு பிரஜை ஒருவருக்கு மாத்திரமே தற்போது காணப்படும் ஆவணங்களின் படி மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றும், எனினும் வௌிநாட்டவர் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனினும் அடுத்த இரண்டு மாதங்களில் மரணதண்டனையை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்றும், மனித உரிமை ஆணைக்குழு உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் ஊடாக எந்தளவு எதிர்ப்புகள் எழுந்தாலும் அதனை நிறைவேற்றியே தீருவேன் எனவுன் ஜனாதிபதி இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...