தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏலத்திற்கு வரும் நடிகை ஸ்ரீதேவியின் ஓவியம் இதுதான்!

சினிமா திரையுலகில் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். குழந்தை  நட்சத்திரமாக நடிக்கத் துவங்கி, பின் ஹீரோயினாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து, பல ஆண்டுகள் முன்னணி நடிகையாக விளங்கினார்.
இந்நிலையில் மறைந்த நடிகை ஶ்ரீதேவி ஓவியம் வரைவதிலும் அதிகமாக ஆர்வம் காட்டினாராம். அவர் வரைந்த ஓவியம் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நிதி  திரட்டுவதற்காக கொடுத்துள்ளார். அது விரைவில் துபாயில் ஏலத்திற்கு வரவுள்ளது. 10 லட்ச ரூபாய்க்கும் மேல் அது விலைபோகலாம் என கூறப்படுகிறது. அந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Comments
Loading...