தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏலம் விடப்பட்டும் விற்பனையாகாத ஹிட்லரின் ஓவியங்கள்…

ஜெர்மனியில் நடந்த நிகழ்வு ஒன்றில்  ஹிட்லரின் ஓவியங்களை யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் ஏலநிறுவனத்தினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உலகையே அதிர வைத்த சர்வாதிகாரியான அடால்ப் ஹிட்லர் வரைந்த ஏராளமான ஓவியங்கள்  ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

நூரம்பெர்க் என்ற இடத்தில் ஹிட்லர் வரைந்த ஓவியங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தன.

எனினும் குறித்த   ஓவியங்களை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால் ஏலநிறுவனத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பிறிதொரு நாளில்  ஹிட்லர் வரைந்த  ஓவியங்கள் ஏலம் விடப்படும் என ஏலநிறுவனத்தினர்   அறிவித்துள்ளனர்.

Comments
Loading...