தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப்பேரணி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான ஏழு பேரின் விடுதலையை வலியுறுத்தி இரு சக்கர வாகனப்பேரணி நடத்த அனுமதி கோரும் மனுவை 3 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவிடுமாறு டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்ற நேற்று உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த திருமுருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவென்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிபதி மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக டிஜிபியிடம் புதிதாக மனு அளிக்க வேண்டுமென்றும், அந்த மனுவை டிஜிபி மூன்று வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை இருசக்கர வாகனங்களில் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை பேரணியாக செல்வதற்கு அனுமதி வழற்குமாறு கேரியுள்ளோம். ஆனால், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. 7 பேரையும் விடுதலை செய்வது என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமலுள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி பேரணி செல்ல அனுமதி வழங்குமாறு காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...