தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐநா.சபை மனித உரிமைக் கவுன்சிலின் கூட்டம் ,தீவிரவாதத்தை வளர்க்கின்றது -பாகிஸ்தான்…

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் நிகழும் மனித உரிமை மீறல்கள், தீவிரவாத பயிற்சிகள் குறித்தும் அங்கு சீனாவுக்கு வர்த்தகத்திற்கான இடம் வழங்கப்படுவது குறித்தும் ,

இந்தியா முன்வைத்த வாதங்கள் ஜெனிவாவில் நடைபெறும் 40 வது ஐநா மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டில் பெரும் சர்ச்சையை  கிளப்பியுள்ளன.

காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள், அறிவுஜீவிகள், சர்வதேச அளவில் அமைதியைக் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதத்தை ஆதரிப்பது குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இரட்டை வேடம் போடுவதாக ஐரோப்பியன் பவுண்டேசன் அமைப்பின் இயக்குனர் ஜூனாய்த் குரேஷி குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும்  வலுக்கட்டாயமாக காஷ்மீரின் ஒரு பகுதியை பிரித்துள்ள பாகிஸ்தான் அதனை தீவிரவாதத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...