தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது ….

ஐரோப்பிய  நாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக  சந்தேகிக்கப்படும் 39 வயதான நவநீதன் என்பவரே ஜேர்மனில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் அரச தலைவர்களை கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்   தொடர்பில் அவரது  விபரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிட ஜேர்மன் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் படுகொலையுடன்அவருக்கு தொடர்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில அரசியல் தலைவர்களை கொலை செய்ய அவர் முயற்சித்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...