தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா  பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும் – சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு வலியுறுத்து..

கடந்த 2015 இல் ஐ.நா  மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டும் என  சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இதனை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும்   அரசாங்கம் பல முக்கிய நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை எனவும் அதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015 மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையில் முக்கியமான பொறிமுறைகள் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்றும்,

குறிப்பாக சர்வதேச நிபுணர்களின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை என்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

இந்தவிடயங்களை அமுலாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது,

இதேவேளை இலங்கை  அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை,  எதிர்வரும் 40வது மாநாட்டில் புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற வேண்டும் எனவும்  சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளமை குரிப்பிடத்தக்கது.

Comments
Loading...