தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா வலியுறுத்து..

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.

பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்றையதினம் , பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தின், ஆசிய – பசுபிக் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மார்க் பீல்ட்டை சந்தித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், தமது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில்,இலங்கை  சபாநாயகர் கரு ஜெயசூரியவை லண்டனில் இன்று வரவேற்றேன். இலங்கையின்  அண்மைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக நாங்கள் பயனுள்ள கலந்துரையாடலை நடத்தினோம் என்றும்,

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  நிறைவேற்றப்பட்ட 30/1 மற்றும் 34/1 தீர்மானங்கள் தொடர்பான வாக்குறுதிகளை இலங்கை  நிறைவேற்றுவதற்கான அவரது ஆதரவுக்கு ஊக்கமளித்தேன்  என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சந்திப்பில்  பிரித்தானியாவுக்கான இலங்கை  தூதுவர் மனிசா குணசேகரவும்  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...