தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுசுட்டானில் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள மாணவர்கள்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்விவலயத்துக்குட்ப்பட்ட ஒட்டுசுட்டான் ஆறுமுகம்  வித்தியாலய வளாகத்தில் 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்

இன்று காலை பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பித்துக்கொண்டிருந்த வேளையில் திடீரென வந்த குளவிக்கூட்டம் மாணவர்களை தாக்கியுள்ளது இதனால் மாணவர்கள் சிதறியோடியுள்ளனர்  இதன்போது குறித்த பாடசாலையை சேர்ந்த 8 மாணவர்களும் பெற்றோர் ஒருவரும் அயல் பாடசாலையான ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் இருவருமாக மொத்தமாக 12 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

அத்தோடு பாடசாலை மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு பெற்றோருடன் வீடுகளுக்கு வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாக பாடசாலை முதல்வர் தெரிவித்தார்

பறந்து வந்த குளவிக் கூட்டம் பாடசாலையில் கூடு அமைத்துள்ளது அதனை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

 

Comments
Loading...