தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுசுட்டான் ஜீவநகர் கிராமத்தில் மாதிரிக்கிராமத்துக்காக அடிக்கல் நாட்டிவைப்பு..

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட ஜீவநகர் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள மாதிரிக்கிராமத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது

தலா  ஏழரை இலட்சம் பெறுமதியான 24 வீடுகளை கொண்ட இந்த மாதிரிக்கிராமத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு முத்துஜயன்கட்டுகுளம் கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்றது

நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான திரு ச சந்திரரூபன் மற்றும் திரு ச தில்லைநடராஜா மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் விஜித கமகே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லினை நாட்டிவைத்தனர்

நிகழ்வில் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம  மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்

Comments
Loading...