தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் தொடர்பில் அரசியல் தலைவர்களுக்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் முறுகல் நிலை…

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி கூட்டமானது நேற்று (9) மாலை 2 மணிக்கு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இருப்பினும் 3.45 மணிவரை அரசியல் தலைவர்கள் எவரும் குறித்த கூட்டத்திற்கு சமூகம் தரவில்லை இதனையடுத்து அரசியல் தலைவர்கள் வருகைதந்தபோது பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அரசியல் தலைவர்களை பிரதேச செயலக வாயிலில் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

தொடர்ச்சியாக எமது கூட்டம் இவ்வாறே நடைபெறுகிறது இன்னும் இருக்கின்ற சிறிய நேரத்தில் என்னத்தை கதைக்க போகிறீர்கள் 27 கிராம அலுவலர் பிரிவுகள் இருக்குறது ஒருகிராம பிரச்சனைக்கு 10 நிமிடம் ஒதுக்க கூட நேரம் போதாது எவ்வாறு கூட்டத்தை நடத்த போகிறீர்கள் யானைக்காடுகள் நேரம் சென்றால் வீடுகளுக்கு செல்ல முடியாது ஒவ்வொரு முறையும் கடைசியாக கூட்டத்தை போட்டு எமது பிரதேச செயலகத்தை புறக்கணிக்கிறீர்கள் நாங்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை நாம் கூட்டத்தை புறக்கணித்து செல்கிறோம் என தெரிவித்தனர்

இதன்போது அரசியல் தலைவர்களும் நிலைப்பாட்டை புரிந்துகொண்டு  உண்மை நிலையை தெளிவுபடுத்தினர் ஒரு நாளில் 3 பிரதேச செயலககங்களில் கூட்ட்டம் நடத்த முடியாது பலமுறை நாமும் கூறியும் எதுவும் நடக்கவில்லை இனிவரும் காலங்களில் இவ்வாறு நடக்காது அடுத்த கூட்டம் முதலாவதாக காலையில் உங்களுக்கு நடக்கும் என்ற உறுதிமொழியுடம்  கூட்டத்தில் பங்குகொள்ள சம்மதித்து கூட்டத்துக்கு சென்றனர்

நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலை 9.30 மணிக்கும் கரைதுறைப்பற்றில் 11 மணிக்கும் ஒட்டுசுட்டானில் 2 மணிக்கும் கூட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன இருந்தும் புதுக்குடியிருப்பு கூட்டம் நிறைவடைய 1 மணியாகியது இதனை தொடர்ந்து கரைதுறைப்பற்று கூட்டமும் ஒட்டுசுட்டான் கூட்டமும் தாமதமாக ஆரம்பிக்க நேரிட்டது இருப்பினும் அடுத்த தடவை 2 இடங்களில் மாத்திரம் கூட்டம் போடுமாறும் ஒரே நாளில் 3 இடங்களில் கூட்டம் போடவேண்டாம் எனவும் இணைத்தளைவர்கள் பிரதேச செயலாளர்களிடம் அரசியல் வாதிகள் பலரும் பொது அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளதோடு இந்த கோரிக்கை  அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுமுள்ளது

Comments
Loading...