தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளத்தின் இளைஞர் கழக விளையாட்டுப்போட்டி…

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்டபட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் இளைஞர் விளையாட்டு போட்டியின் இறுதிப்போட்டிகள்  நேற்றைய தினம்  ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரசே இளைஞர் கழக சம்மேளன  தலைவர் ஜே.லக்சிதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு வடமாகாண அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பிரதி அமைச்சர் ஹாதர் மஸ்தான் கலந்துகொண்டுள்ளார்.

சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந்,மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர் தேசிய இளைஞர் சேவை மன்ற உதவிப்பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை  சிறப்பித்துள்ளார்கள்.​

மேலும் சிறப்புற நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஙகு பற்றி வெற்றிபெற்ற வீரர்களுக்கு முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களினால் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுசுட்டான் பிரதேசத்தினை சேர்ந்த பதினேழு  கழகங்களுக்கிடையில்  நடைபெற்ற தடகள போட்டிகள் சிறப்புற நடைபெற்றுள்ளமை இங்கு  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...