தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

 ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவில்லை என்றால் 75 லட்சம் பரிசு..

ஒரு வருடம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தவில்லை என்றால் 75 லட்சம் பரிசு என வைட்டமினவாட்டர் என்ற நிறுவனம்  அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், ஒருவர் ஒரு வருடத்திற்கு ஸ்மார்ட் போன், டேப்லெட், என ஏதையும் பயன்படுத்த கூடாது என்றும்,

அதற்கு பதிலாக 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பியூச்சர் போன் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த போட்டியில் கலந்துகொள்ள #nophoneforayear என்ற ஹேஸ்டேகை தங்களது டிவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அந்த பதிவை பார்த்து குறித்த நிறுவனம் உங்களை தொடர்புகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த போட்டியில் கலந்து கொள்பவர்கள் போட்டியின் காலத்தில் அலுவலகத்தில் கம்ப்யூட்டரில் வேலை செய்ய அனுமதி உண்டு எனவும் வைட்டமினவாட்டர்  நிறுவனம் கூறியுள்ளது .

போட்டியின் போது கொடுக்கப்படும் பியூச்சர் போனில் மட்டுமே அவசரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஜனவரி 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Comments
Loading...