தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள இலங்கை பெண்..

தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் உள்ள இலங்கை ஏதிலி  பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

அரச்சலூரில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மனைவி கலானியே  இவ்வறு நான்கு குழந்தைகளிற்கு தாயாகியுள்ளார்.

இந் நிலையில் காலாநிதிக்கு ஸ்கேன் செய்த மருத்துவர்கள் 3 குழந்தைகள் இருப்பதாக கூறியுள்ளனர்.

எனினும் அவருக்கு முதலில் ஒரு குழந்தை சுகப்பிரசவம் ஆனது. பின்னர், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய நேரிட்ட போது அடுத்தடுத்து 3 குழந்தைகளை கலாணி பெற்றெடுத்தார்.

2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் என 4 குழந்தைகளும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதான ஒன்று என்பதால் அவர்களது குடும்பம் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்களாம்.

இதேவேளை ஈரோடு மருத்துவமனையில் இதுவரை ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளே பிறந்துள்ள நிலையில் , ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...