தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கடத்தல்காரர்களுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் பலி- பிரேசிலில் சம்பவம்..

பிரேசிலில்  போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ நகரில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், பதுக்கி வைத்திருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குறிப்பிட்ட பகுதியை சுற்றி வளைத்த போது போதை கடத்தல் கும்பலுக்கும் பொலிஸாருக்கும் இடையில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

பல மணி நேரம் நீடித்த  இந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின் போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்த 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த  கட்டடத்தில் இருந்து ஏராளமான போதைப் பொருள், துப்பாக்கிகள், மற்றும்  வெடிமருந்துகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Comments
Loading...