தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவதற்கான செயற்பாடுகள்…

மன்னார்  சதொச வளாக மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை ஃபுளோரிடா ஆய்வுக்கூடத்திற்கு அனுப்புவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 28 ஆம் திகதி மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் சந்தொச வளாகத்தில் அகழ்வு பணிகள் மேற்கொளப்பட்டு வருகின்றன,

இந்நிலையில்  84 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட  குறித்த அகழ்வு பணியில்  இதுவரையில் 175 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை 169 மனித எலும்புக்கூடுகள் அங்கிருந்து அகற்றப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...