தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கண் கருவளையத்தை போக்க இலகுவான டிப்ஸ்…

எமது  உள்ளத்தினை காட்டும் கண்ணாடி கண்கள்தான். அப்படியான கண்களை நாம் கவனமாக பாதுகாக்க வேண்டும்.
நாம அதிக நேரம் வெயிலில் அலைவதாலும் , நித்திரை கு/றைவாக கொள்வதாலும்   மிகவும் மென்மையான தோலான கண்களுக்கு அடியில் கருவளையம் தோன்றுகின்றது.
இதனை போக்க என்ன செய்யலாம்?
* எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து கண்ணுக்கு அடியில் ஒத்தி எடுக்க வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் கருவளையம் மறையும்.
* புதினாவை அரைத்து அந்த விழுதை கருவளையத்தில் தடவினால் கருவளையம் மறையும்.
* குளிர்ந்த பாலில் பஞ்சை நனைத்து கண்களில் 15 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் மறையும்.
* ஆலிவ் ஆயில் கொண்டு கண்களில் மசாஜ் செய்தால் கண்கள் களைப்பு நீங்கி கருவளையம் மறையும்.
* பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து அதில் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து சிறிது நேரம் கழித்து கண்களைக் கழுவினால் கண் கருவளையம் மறையும்.
* மஞ்சளுடன் பாதாம் எண்ணெய் சேர்த்து கண்களுக்கடியில் மசாஜ் செய்தால் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
* கேரட்டை வெட்டி கண்ணில் வைத்துக் கொண்டு ஓய்வு எடுத்தால் கருவளையம் மறையத் தொடங்கும்.
Comments
Loading...