தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கனகராஜன்குளம்- புதுக்குளத்தில் உள்ள தங்கம்மா கல்வி வளாகத்தில் வன்னியின் முதலாவது E- கல்வி நிலையம் திறந்துவைப்பு..

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் புதுக்குளம் கிராமத்தில் வன்னியின் முதலாவது E- கல்வி நிலையமாக தங்கம்மா கல்வி  வளாகம்  E- கல்வி நிலையம் நேற்றையதினம்   திறந்துவைக்கப்பட்டது

வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் புதுக்குளம் கிராமத்தில் கடந்த 2017 ம் ஆண்டுமுதல் பேராசியியர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களால் தங்கம்மா முதியோர் இல்லம் மற்றும் தங்கம்மா இலவச கல்விநிலையம் என்பன நடாத்தப்பட்டு வருகிறது.

 குறித்த தங்கம்மா கல்வி  வளாகத்தில் புலம்பெயர் அமைப்பான we 4 you அமைப்பின் ஊடாக குறித்த வளாகத்தில் E-கல்வி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான கணணிகளையும் அதற்கான ஆசிரியரையும்  வழங்கி உதவி  செய்துள்ளனர் .

இதனடிப்படையில் இதற்கான கட்டிடம் தங்கம்மா கல்வி  வளாகத்தால்  அமைக்கப்பட்டு  நேற்று உத்தியோகபூர்வமாக தங்கம்மா கல்வி  வளாகம்  E- கல்வி நிலையம் திறந்துவைக்கப்பட்டது

பேராசியியர் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்களின் தலைமையில் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் திரு க பரந்தாமன் அவர்கள் குறித்ததங்கம்மா E- கல்வி நிலையத்தை நாடாவை வெட்டி திறந்துவைத்தார்.

நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ம தியாகராசா மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகர்  கனகராஜன்குளம் தெற்கு கிராம அலுவலர் எஸ்.சிவகாந்தன் மாணவர்கள் பெற்றோர் நலன்விரும்பிகலென  பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...