தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கரணைகிழங்கின் நன்மைகள்

பொதுவாக கரணைகிழங்கை விரும்பி உண்பவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் கரணைகிழங்கு சாப்பிடுவதனால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றது. அவை என்ன என்பதை பார்க்கலாம்,

கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து   அழகையும், ஆரோக்கியத்தையும் தரவல்லது.

உடல் சுறுசுறுப்பாக செயல்பட கரணைகிழங்கு  உதவுகிறது. அதோடு  உடலில்  கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையையும்  குறைக்க உதவுகிறது.

மருத்துவ குணங்கள்

கருணைக் கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்தவதில்லை. கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம்  சிறப்பாக செயல்படவும் மூலநோயை குணப்படுத்தவும் உதவுகிறது.

கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறதோடு மட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து உடல் உறுப்புகளுக்கு பலம்  தருவதாகவும் இருக்கிறது.

  காரல் தன்மை குறைய

கருணைக்கிழங்கு சிறிது காரல் தன்மையுள்ளதால் கிழங்கை வேக வைக்கும் போது சிறிது புளியிட்டு வேக வைத்தால் காரல் தன்மை குறையும்.

உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது.

இதனால் மூலச்சூடு, எரிச்சல்  நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.

ரத்த  சுத்திகரிப்பு

கருணைக்கிழங்கு ரத்தத்தை சுத்தம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது. உடலுக்கு உறுதியளிக்கக் கூடியது, பசியை  உண்டாக்கும் இயல்புடையது.

அதோடு கருணைக் கிழங்கை சாப்பிட்டால் உடல்வலிகூட  காணாமல்  போய்விடும்.

Comments
Loading...