தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கருணா சொன்னது முழுப்பொய்- சரத்பொன்சேகா..

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவின் தலைவர் பொட்டுஅம்மான் வெளிநாடொன்றில் உயிருடன் உள்ளார் என கருணா கூறியுள்ளமை முழு பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  முன்னாள் இராணுவதளபதியும் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

அதோடு  வெடிகுண்டை வெடிக்கவைத்து பொட்டு அம்மான் யுத்தத்தின் இறுதியில்   தற்கொலை செய்துகொண்டதாகவும்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் இறுதி தருணங்களில் பிரபாகரனுடன் 75 போராளிகள் காணப்பட்டதாகவும்  அவர்களில் 70 பேர் வரை அவருடனேயே கொல்லப்பட்டனர்.

பொட்டுஅம்மான் துப்பாக்கிசூட்டில் காயமடைந்ததகவும்,  அதன் பின்னர் வெடிகுண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் பொட்டுஅம்மானின் உடல மீட்கப்பட்டதாக கேபி உறுதிப்படுத்தியதாகவும்  சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பொட்டு அம்மான் நோர்வேயிற்கு தப்பிச்சென்றுவிட்டார் என தெரிவிக்கப்படுவது பொய்யான தகவல் என்றும் சரத் பொன்சேகா  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...