தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கருணா சொன்ன ஆரூடம்…

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, த. தே. கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னையும், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா கூறியுள்ளார்.

இத்தகவலை அவர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கருணா   இவ்வாறு பதிவிட்ட  சில மணிநேரங்களிலேயே வியாழேந்திரன் பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுகின்றது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பவர்களே பிரதமர் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  தமது பெரும்பான்மையை காட்டுவதற்கு மகிந்த தரப்பும், ரணில் தரப்பும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை  கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ஏற்படும் என  தான் எதிர்வு கூறிய வகையிலேயே பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கருணா கூறியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...