தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கரும்புலிகளால் கட்டு நாயக்க மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ரணிலிற்கு பங்குண்டு – கருணா..

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரால் மேற்கொள்ளப்பட்ட கட்டு நாயக்க மீதான தாக்குதலில்  ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தொடர்பு இருப்பதாக கருணா தெரிவித்துள்ளார்.

இந்த  தகவலை கருணா அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“புலிகளுடன் ஒருபோதும் ஒப்பந்தங்களைச் செய்யவில்லை என ரணில் கூறுகிறார்…

எனினும் கடந்த 2001 ம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதல் என்ன? அது விடுதலைப் புலிகளுக்கும் சில கொழும்பு அரசியல்வாதிகளுக்கும் வெளிநாட்டு புலனாய்வுத்துறைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பாகமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்” என  கருணா  தெரிவித்துள்ளார்.

Comments
Loading...