தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்

கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய மாணவர்கள் எதிர்வரும் மே மாதம் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் ஆசிரியர்கல்விஆணையாளர் கே.என்.எச்.பண்டார தெரிவித்துள்ளார்.

இம்முறை கல்வியியல் கல்லூரிகளுக்கு நான்காயிரத்து 745 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக மாணவர்கள்  தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும்  ஆரம்ப நிலை மற்றும் தகவல் தொழில்நுட்ப பாடங்களுக்காக இம்முறையும் கூடுதலான மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சின் ஆசிரியர்கல்விஆணையாளர் கே.என்.எச்.பண்டார    தெரிவித்துள்ளார்

Comments
Loading...