தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கள்ளு தவறணையினை அகற்ற கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு  பேராற்று பாலத்திற்கு அண்மையில் அமைந்துள்ள கள்ளுத்தவறனையினால் கிராம மக்கள் இருக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த கள்ளுத்தவறணையின் வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு அருகில் இருக்கும் குடும்பங்களுக்கு தொல்லை கொடுப்பதாக பலதடவைகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில்,

நேற்று முன்தினம்  இரவு கள்ளுத்தவறணையில் கள்ளிணை அருந்திய சிலர் அருகில் இருந்த குடிமக்களுக்கு பாரிய இடையூறு விளைவித்துள்ளார்கள்

இன்னிலையில் குறித்த கள்ளுத்தவறனையினை அப்புறப்படுத்துமாறு கோரி கிராம மக்கள்  நேற்று  கள்ளுத்தவறனைபகுதியில் கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

 சம்பவ இடத்திற்கு வந்த ஒட்டுசுட்டான் பொலீசார் மக்களின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு குறித்த கள்ளுத்தவறணையினை,

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமையவே  செயற்படவேண்டும் என்றும், அதுவரை அதனை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள்.

முத்துஜயன் கட்டு வலதுகரை -இடதுகரைக்கான முதன்மை வீதியாக குறித்த வீதி காணப்படுகின்றது.

இந்த வீதிக்கு அருகில் கள்ளுத்தவறனை இருப்பதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் தொடக்கம் பெண்கள் வரையில் மதுபிரியர்களின் இம்சைகளுக்கு உள்ளாகி வருகின்றார்கள் அதனைவிட அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மது பிரியர்கள் தொல்லை கொடுத்து வருவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

 

Comments
Loading...