தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காங்கேசந்துறையில் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்..

யாழ்.காங்கேசன்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் இரு நாட்களாகியும் கரைதிரும்பவில்லை என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காங்கேசன்துறைக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. .

மீனவர்கள்  தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்  கடற்படையினரின் உதவியுடன் காணாமற் போன குறித்த இரு மீனவர்களையும் தேடும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ். மாவிட்டபுரத்தைச் சேர்ந்த சி. இரத்தினசிங்கம் மற்றும் டே.ரேகன்  ஆகிய இருவருமே இவ்வாறு காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...